Breaking News
நாமலுக்காக களமிறங்கிய மஹிந்த: பொதுஜன பெரமுனவின் வெற்றியை நோக்கியப் பயணம்
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான பொதுக்கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.
மாவட்ட மட்டத்திலான பிரதான மக்கள் பேரணிகளின் தொடர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள தொகுதி மட்ட பொதுக்கூட்டங்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்ட பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முக்கிய பொதுக்கூட்டம் நடத்தப்படும் மேலும் சில மாவட்டங்களில் இரண்டு முக்கிய மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.