கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த வெற்றி: அதிஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலர் பரிசு
.
கனடாவில் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலரை வெற்றிகொண்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி விளையாடிவரும் ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் ஓகஸ்ட் 14ஆம் திகதி லோட்டோ 6-49 சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலரை வெற்றிபெற்றுள்ளார்.
பிராம்ப்டன் நகரை சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.
Etobicoke நகரில் உள்ள Woodbine Racetrackகில் அவர் தனது வெற்றி சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“முதலில் நான் 1,000 டொலரையே வென்றேன் என்று நினைத்தேன். நான் திரையை உன்னிப்பாகப் பார்த்தேன், நான் உண்மையில் எவ்வளவு வெற்றி பெற்றேன் என்பதை விரைவாக உணர்ந்தேன்.”
“நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், நான் உறைந்து போனேன். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். தனக்கு கிடைத்த அதிஷ்டத்தை மனைவி மற்றும் மகள் தொடங்கி தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.
“என்னை விட அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமான கடனை செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக ஜெயக்குமார் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.