Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மாவீரர் நாள் தமிழர் நாற்காட்டியில் மிகமுக்கிய தினமாகும்; அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் உரை!

உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வதானது ஒருமைப்பாட்டின் மிகவலுவானதொரு அடையாளமாகும்.

மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ், தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வதானது ஒருமைப்பாட்டின் மிகவலுவானதொரு அடையாளமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அவுஸ்திரேலியாவிலும், ஏனைய உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் தான் உடன்நிற்பதாகவும் டேவிட் ஷுபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

'நான் இப்போது இந்த வார்த்தைகளை அவுஸ்திரேலிய செனெட் சபையில் கூறுகின்றேன். இந்தத் தினத்தை நினைவுகூருவதற்காக ஒன்றுபட்டிருக்கும் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட அவுஸ்திரேலியவாழ் தமிழர்களே, உங்களது தியாகங்களை நாம் அங்கீகரிக்கின்றோம். கடந்த காலம் தொடர்பில் நேர்மையாகப் பேசுவதுடன் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் அடைந்துகொள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் உறுதியளித்தார்.