PVR நிறுவனத்திற்கு எதிராக தமிழர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். -கார்ட்டூனிஸ்ட் பாலா
குறைந்த முதலீட்டில்.. இந்திய தணிக்கைத் துறையின் விதிகளுக்கு நடுவில் புத்திசாலித்தனமாக சொல்ல வந்த விசயத்தை மிக நேர்த்தியாக எடுத்திருந்தார் கிட்டு..
மிகுந்த வருத்தமாகவும் கொந்தளிப்பாகவும் இருக்கிறது..
சல்லியர்கள் திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பே எனக்கும் ஏகலைவன் அவர்களுக்கும் போட்டுக் காட்டினார் அண்ணன் சுரேஷ் காமாட்சி Suresh Kamatchi .
மேதகு எடுத்த இயக்குனர் தம்பி கிட்டு மீதான நம்பிக்கையில் தான் அந்த படத்தை பார்க்க போனேன்..
படம் முடிந்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.. தம்பி கிட்டுவை கட்டி அணைத்து வாழ்த்தினேன்.
குறைந்த முதலீட்டில்.. இந்திய தணிக்கைத் துறையின் விதிகளுக்கு நடுவில் புத்திசாலித்தனமாக சொல்ல வந்த விசயத்தை மிக நேர்த்தியாக எடுத்திருந்தார் கிட்டு..
உடனே விமர்சனம் எழுதுறேன்.. என்றேன்.. வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டதும் எழுதுங்க என்றார் சுரேஷ் காமாட்சி.
இப்படி அவர் சொல்லி படம் வெளியீடு தேதி அறிவித்து ஒவ்வொரு முறையும் திரையரங்கு கிடைக்காமல் ஒத்தி வைக்கும் சூழல் உருவாக்கப்பட்டது..
நானும் ஒவ்வொரு முறையும் விமர்சனம் எழுதவா என்று கேட்க கிட்டுவை தி. கிட்டு அழைத்து, ரத்தான தகவல் கிடைக்கும்போது சங்கடமாக உணர்ந்தேன்.
ஏனெனில் சல்லியர்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு படைப்பாக இடம்பெறக்கூடியது. தமிழர் என்ற பெயரை பெருமை அடைய செய்த மாவீரர் மேதகு அவர்களின் படைப்பிரிவில் ஒரு அங்கத்தினரின் வாழ்வை பதிவு செய்த ஆவணம் சல்லியர்கள்.
அந்த படத்தில் நடித்த கதையின் நாயகி சத்யாவும், நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக நடித்த தம்பியும், அண்ணன் க்ருணாசும் பிராமதப்படுத்தியிருப்பார்கள்.
தமிழரின் போரியல் போராட்ட வாழ்வில் ஒரு சிறு பிரிவை எடுத்து இப்படி ஒரு படைப்பை கொடுக்க முடியும் எனில் மொத்த போராட்டத்தையும் எடுத்தால் அது எப்பேற்பட காவியமாக இருக்கும் என்று யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது.
ஆனால் அப்படி தமிழரின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு படைப்புக்கு தமிழ்நாட்டு திரையரங்கில் இடமில்லை என்பதுதான் தமிழர்களுக்கு நேர்ந்த துயரம்..
பார்வையாளனாக எனக்கே வருத்தம் வருகையில் படைப்பாளியாக கிட்டுவும் பணம் போட்டவர்கள் நிலையும் யோசித்திப்பாருங்கள்.
நேற்று சுரேஷ் காமாட்சி அவர்களை நேர்காணல் செய்தபோதுகூட,
"எப்படியும் 1 ம் தேதி கொண்டுவந்துருவேன்" என்று என்னிடம் நம்பிக்கையாகதான் பேசினார்..
ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தியேட்டர் இல்லை என்ற தகவலைச் சொல்லும்போது அவர் உடைந்துபோனதைப் பார்க்கிறேன்.
ஏனெனில் சல்லியர்கள் படத்தை அவர் வணிகத்திற்காக வெளியிட முன்வரவில்லை..
"இதை வெளியிட்டால் எனக்கு சில லட்சங்கள் நஷ்டங்கள் வரலாம்.. பரவாயில்லை.. ஆனால் இந்த படம் வெளியாகணும்" என்று சுரேஷ் காமாட்சி சொன்னதற்கு ஒரே காரணம் அந்த படத்தை ஆன்மாவில் இருந்து உணர்வுப்பூர்வமாக அவர் அணுகினார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆட்சியும் சினிமாவும் வணிகமும் தெலுங்கரிடம் தான் இருக்கிறது. இதில் PVR போன்ற ஒற்றை நிறுவனங்களின் ஏகபோக அடவாடி என்பது ஆபத்தானது. கண்டனத்திற்குரியது.
சல்லியர்கள் படத்திற்கு திரையரங்கம் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் வணிகம் அல்ல.. அந்த படம் பேசும் தமிழர் வரலாறு..
இங்கு பெயர்தான் தமிழ்நாடு..
ஆனால் ஒடுக்கப்படுபவன் தமிழன் தான்..
PVR நிறுவனத்திற்கு எதிராக தமிழர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா


