Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தீபாவளி பண்டிகைக்கு கிடைத்த யுனேஸ்கோவின் அங்கீகாரம்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில்

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று (10) இணைக்கப்பட்டுள்ளது. 
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

அருவமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ICH) 20 மாநாடு தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 
இந்த மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். 

டிசம்பர் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 
தீபாவளிக்கு முன்னரே இந்தியாவின் பல முக்கிய நிகழ்வுகள் யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, வேத மந்திரங்களின் பாரம்பரியம் மற்றும் 'ராமாயண' காவியத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ராம்லீலா உள்ளிட்ட 15 மரபுகள் தற்போது இந்தியாவில் யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.