Breaking News
கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள ரஷ்யப் பெண்!
,
ரஷ்யப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
பெந்தோட்டை கடற்கரையில் நீந்தச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்ததாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 49 வயதுடைய ரஷ்யப் பெண்.
உயிரிழந்த பெண், வெளிநாட்டினர் சிலர் உட்பட கடலில் நீந்தச் சென்றிருந்த போதே இந்த விபத்தில் அவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


