Breaking News
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அரசியல் தீர்வுக்கான மார்க்கம்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அரசியல் தீர்வுக்கான மார்க்கம்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஏதோ ஒருவகையில் அரசியல் தீர்வுக்கான மார்க்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கைகொண்டிருந்தனர். இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்றுவரையில் அத்தகைய தீர்வு வழங்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீ்ரவு காண்பதற்கு 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவந்தது. ஆனாலும் இலங்கை அரசாங்கமானது 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கூட இன்னமும் தயாராக இல்லை.இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வாதார விவகாரத்திலும் இந்தியா தற்போது அக்கறையற்ற போக்கை கடைப்பிடிக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
பூகோள அரசியல் ரீதியான விடயங்கள் இதற்கு காரணமாக அமைவதற்கான சாத்தியம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக சீனாவுடான போட்டியினால் அதனை கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவமளிக்கின்றனஇலங்கையில் பூகோள போட்டித்தன்மை அதிகரித்திருக்கின்றது. சீனாவில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட மேற்குலகநாடுகள் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய பூகோள ரீதியிலான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான இந்த நாடுகளின் முன்னைய நிலைப்பாடுகள் தற்போது மாற்றம் கண்டிருப்பதாகவே நோக்கவேண்டியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் இந்த பூகோள அரசியல் சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்