Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்

.

சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவ் இடமாற்றக் கடிதங்களை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து கடந்த 20 ஆம் திகதி வழங்கி வைத்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.மகேந்திரன் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி டி.எஸ்.ஜெபரட்ணம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாகவும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி த. சுசிதரன் வேலணை சுகாதார வைத்திய அதிகாரியாகவும்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி அ.ஜெயகுமரன் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.இந்திரமோகன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாகவும், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியாகவும்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி வை.யதுநந்தன் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய  வைத்திய கலாநிதி சு.மோகனகுமார் சங்கானை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாகவும், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி த.துஸ்யந்தன் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.