தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள்
.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய மகள் என நம்பப்படும் 21 வயதான எலிசவெட்டா கிரிவோனோகிக்(Elizaveta Krivonogikh), உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து பாரிஸில் போலி அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.உக்ரேனிய தொலைக்காட்சியின் செய்திகளை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, அந்த பெண், மறைந்த புட்டின் கூட்டாளியான ஒலெக் ருட்னோவின் உறவினராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதாகவும், அவருடைய பெயரை குடும்ப பெயராக பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.இப்போது லூயிசா ரோசோவா (Luiza Rozova) என்று அழைக்கப்படும் எலிசவெட்டா கிரிவோனோகிக், ரஷ்யாவில் சமூக ஊடகங்களில் ஒரு காலத்தில் ஆக்டிவாக இருந்த போதிலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
லூயிசாவின் தாய் புடினின் காதலியாக இருந்தவர்.
லூயிசாவின் தாயார், ஸ்வெட்லானா கிரிவோனோகிக், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறுவதற்கு முன்பு, புடினின் நீண்டகால காதலியாக இருந்தவர்.இப்போது ஸ்வெட்லானா ஒரு பெரிய வங்கியில் பங்குகள் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நன்கு அறியப்பட்ட ஸ்ட்ரிப் கிளப்பின் உரிமையுடன் ஒரு பெரிய செல்வந்தராக உருவாகியுள்ளார்.தாய் மற்றும் மகள் இருவரும் கடைசி பெயரை ருட்னோவா பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.விளாடிமிரோவ்னா என்ற தனது குடும்ப பெயரை மறைத்து வைத்திருந்த லூயிசா ரோசோவா என்றும் அழைக்கப்படும் எலிசவெட்டா கிரிவோனோகிக், ஒரு காலத்தில் பாரிஸ் மேலாண்மை மற்றும் கலைப் பள்ளியில் படிக்கும் மாணவியாக இருந்ததாகவும், ஆனால் அவர் இப்போது படிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.லூயிசாவும் அவரது தாயும் மொனாக்கோவில் £3.1 மில்லியன் ஆடம்பரமான வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
ஆடம்பர வாழ்க்கை வாழும் புடினின் ரகசிய மகன்கள்.
விளாடிமிர் புடின் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் அலினா கபேவா ஆகியோருக்கு இரண்டு ரகசிய மகன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவான் மற்றும் விளாடிமிர் ஜூனியர் என பெயர்கொண்ட இவர்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி மிகவும் ரகசியகம வாழ்கின்றனர் என செய்திகள் தெரிவிக்கிறது. முன்னதாக, தி டோசியர் சென்டர் என்ற ரஷ்ய புலனாய்வு இதழியல் இணையதளம், புடினின் மகன்கள் வால்டாய் ஏரிக்கு அருகில் உள்ள புட்டினின் பெரும் பாதுகாப்பு நிறைந்த தோட்டத்தில், ஆயாக்கள், ஆசிரியர்கள் மற்றும் கிரெம்ளின் காவலர்களுடன் வசிப்பதாக கூறியது. அவர்களின் பிறப்பு பற்றிய அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லாமல் அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் தனி விமானங்கள், படகுகள் மற்றும் கவச ரயில்களில் பயணம் செய்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.