Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டம்!

சாம்பியன்ஸ் ஆன யாழ் அணிகள்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான  கரப்பந்தாட்டம், சாம்பியன்ஸ் ஆன யாழ் அணிகள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20 வயதுபிரிவில் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரி அணி ஆதிக்கம்.

கடந்த வியாழன் அன்று ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலயத்தில் ஆரம்பமான ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி. 

கவர்ச்சிகரமான போட்டிகளோடு கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற போட்டியிலே இறுதி நாளான இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியிலே 16,18,20 ஆகிய மூன்று வயதுப்பிரிவிலும் யாழ் அணிகள் சாம்பியன்ஸ் ஆக தெரிவாகிய அதே வேளை ஏனைய அணிகளும் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

16 வயதுப்பிரிவிலே வலய மட்டத்தில் பலப்பரீட்சை நடாத்திய அதே இரு அணிகள் மாகாணத்திலும் பலப்பரீட்சை.. வலய மட்டத்தில் புத்தூர் சோமஸ்கந்த அணி சாம்பியன் ஆன போதும் இந்த தடவை ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலய அணி சாம்பியன் ஆனது

18 வயதுப்பிரிவில் எதிர்பாரா விதமாக வெளியேறிய பலம்மிக்க அணிகள்..

இறுதிப்போட்டியில் Mannar Olaiththoduvai RCTMS 
அணியை எதிர்கொண்ட ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலயம் போராட்டத்தின் மத்தியில் சாம்பியன் ஆனது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20 வயது பிரிவினருக்கான போட்டியிலே
மன்னார் சித்திவிநாயகர் அணியை எதிர்கொண்ட புத்தூர் சோமஸ்கந்த கல்லூரி அணி வெற்றிப்பெற்று சாம்பியன் ஆனது.

புத்தூர் சோமஸ்கந்த பாடசாலை அணிகள் வருடாவருடம்  தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகும் அதே வேளை அண்மைக்காலங்களில் தேசியம் வரையில் சென்று சாதனைகளை நிலை நாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை ஒவ்வொரு வீரர்,அவர்களை செதுக்கிய பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர் பாடசாலை சமூகத்தையும் சேரும். 

வழமை போல் இந்த வருடமும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பாடசாலை அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. அனைத்து பாடசாலை வீரர்கள், பயிற்றுவிப்பாளர்,அதிபர் ஆசிரியர் என அத்தனை பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.