Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிறையில் கைதியின் ஆடைகளை அவிழ்த்து தாக்கியதாக STF மீது குற்றச்சாட்டு!

பூசா சிறையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்ட இளைஞனின் உயிரை காப்பாற்றிய சிறை அதிகாரிகள்!

சிறையில் கைதி ஒருவர்இ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (ளுவுகு) எவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டார் என்பதைஇ கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் நாட்டின் முன்னணி அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இணைய வசதியைப் பயன்படுத்தி பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு கைதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிர்வாணமாக்கிஇ தாக்கியதாகஇ சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கொழும்பில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி வெளிப்படுத்தியுள்ளது. 

'மே 23இ 2025 அன்றுஇ பூசா சிறைச்சாலையில் ஒரு கைதி கொடூரமாகத் தாக்கப்படுகிறார். இந்தக் கைதி ரவிது சங்க சில்வா என்ற கைதி.'

நீதிமன்றத்திற்குச் செல்லாமல் இணையத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதை சட்டப்பூர்வமாக்கும் சட்ட மூலத்தை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 

சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியை அதே வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும்போதுஇ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்இ அவரைச் சோதனை செய்ய வேண்டியதன் அவசியம் என்னவென?  கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். 

'ஆகவேஇ இந்தக் கைதியைஇ அதற்காகஇ பூசா சிறைச்சாலை அலுவலகத்திற்குதான் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.  பூசா சிறைச்சாலையில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும்போதுஇ இந்த ளுவுகு அவரை சோதனை செய்துள்ளனர். எனவேஇ சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதியை சிறைச்சாலை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும்போது ஏன் சோதனை செய்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு உள்ள கேள்வி?'

கைதி ஏற்கனவே ஸ்கேனரைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட்டிருந்தாலும்இ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதியின் ஆடைகளை கழற்றி சோதனை செய்ததாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கூறுகிறது.

'ஏனென்றால் சிறைச்சாலைக்கு சரியான பாதுகாப்பை ளுவுகு வழங்கவில்லை. அவ்வாறு சோதனைச் செய்ய வேண்டுமெனின்இ சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஆயுதங்கள் இருக்க வேண்டும். மேலும்இ இந்த நபரை ஸ்கேனர் இயந்திரத்தில் சோதனை செய்விட்டுதான் சோதனை செய்கிறார்கள். பின்னர் அவரை முழுமையாக நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.'

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்இ தடுப்புக் கைதியான ரவிது சங்க சில்வாவின் தலையை குறிவைத்து தாக்கியதாகக் கூறும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுஇ சிறைச்சாலை அதிகாரிகள் இருக்கின்றபோதுஇ எந்த அதிகாரத்தின் கீழ் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதிகளின் ஆடைகள்இ அணிகலன் சோதித்தனர் என  கடுமையாகக் கேள்வி எழுப்பியது.

'அவர் ஒரு சந்தேக நபர்இ அவர் ஒரு விசாரணைக் கைதி. இந்தத் தாக்குதலுக்குக் காரணம் அவர் தலையில் அணிந்திருந்த ஒரு பட்டி. இந்த பட்டியை பார்த்த ளுவுகு அதிகாரிஇ அது உங்களுக்கு உரிமையா என்று கேட்டுள்ளாராம்.  கேட்கின்ற கதையை பாருங்கள். இது ளுவுகு-உடன் தொடர்புடையதா? கைதி அணிந்திருப்பது ளுவுகு-உடன் தொடர்புடையதா? அதை ஆராய்ந்து பார்க்க சிறைச்சாலை இருக்கிறது. ஆனால் அவரை நிர்வாணமாக்கிஇ பரிசோதித்துஇ எரிச்சலடைய செய்து பின்னர் தாக்கியும் உள்ளனர்.  இந்த கைதி மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் தாக்கப்படுகிறார்.'

பூசா சிறையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்ட இந்த இளைஞனின் உயிரை சிறை அதிகாரிகள் காப்பாற்றியதாக சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிடுகின்றார். 

'இந்தக் கைதி சிறை அதிகாரியால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இல்லையெனில்இ அவர் இந்த ளுவுகு-இனால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார். அவர்இ இணையத்தின் ஊடாக நீதித்துறை நடவடிக்கைகளுக்கு முன்னிலையாகும்போதுஇ இது குறித்து நீதிபதியிடம் முறைப்பாடு அளித்தமையால் தான்இ இன்றுஇ இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தவும்இ இந்த கைதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் நீதிபதி உத்தரவிடுகிறார்.'

இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்திஇ கைதியைத் தாக்கிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தண்டிக்குமாறு கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதாக இந்த குழு கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளது.
சிங்களக் கைதிகளுக்கே இப்படி என்றால் சிங்கள இனவெறி அரசுகளின் ஆட்சிகளில் அரசியல் தமிழ்க் கைதிகள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள்.