Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது ஹமாஸ்

,

ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.

ரோமிகோனேன்,டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர்,எமிலி டமரி ஆகிய மூன்று பெண் பணயக்கைதிகiளே ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

இவர்களை 2003ம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது.

காசா நகரின் அல்சரயா சந்தியில் இவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றவேளை பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.

ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை ஒப்படைத்துள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி இவர்களை செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேலிய இராணுவத்திடம் கையளித்துள்ளது.அவர்கள் இஸ்ரேலிற்குள் வந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தங்கள் தாய்மார்களுடன் சேர்க்கப்படுவார்கள்,தென் இஸ்ரேலில் அவர்களை ஆரம்பகட்ட மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இஸ்ரேலிய தலைநகருக்கு மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்வோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.