தில்லியில் காற்றின் மாசு அளவு அபாயகரமான அளவை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
.
தில்லியில் காற்றின் மாசு அளவு அபாயகரமான அளவை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. தில்லி நகரம் அடிப்படையில் நவம்பர் முதல் ஜனவரி வரை வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிடுகிறது. தில்லி நாட்டின் தலைநகராகவே இருக்க வேண்டுமா?
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, பிரதமர் மோடியின் நெருங்கிய நம்பிக்கையாளரும், பீகார் பாஜக பொறுப்பாளருமான வினோத் தாவ்டே பல கோடி ரூபாய் பணத்தை விநியோகம் செய்த போது, கையும் களவுமாக பிடிபட்டார். தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யாததால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பாஜகவின் கொள்கைகள் இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு எதிரானது. பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். தங்களின் திட்டத்தின் மூலம் நாட்டு மக்களை வழிநடத்த பாஜக விரும்புகிறது. அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராட வேண்டும்.
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான தாக்குதல் மிகவும் மோசமானது. பாஜக தலைமையிலான மகாயுதி அரசாங்கத்தின் கீழ் குண்டர்கள் எப்படி செயல்பட்டு வருகின்றனர் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவில் 2023-24ஆம் கல்வியாண்டில் சர்வதேச மாணவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஓபன் டோர்ஸ் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளன.
தில்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதமாக வந்தன. 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதே போல 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.