Breaking News
பதவியேற்பு விழாவை நடத்தாமலேயே 20 கோடி ரூபாயை சேமித்த அநுர அரசு..!
.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது சுமார் 200 மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் இனி மக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.