Breaking News
நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்களின் தரவரிசை: சிறீதரனுக்கு முதலிடம்
.
நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்களின் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2020 தொடக்கம் 2024 வரையான நாடாளுமன்றில், 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுள் சிறப்பாக செயல்பட்ட முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவுசெய்ப்பட்டுள்ளார்.
சிறீதரன்தொடர்ந்து 2020 பொது தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.