தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு: அஞ்சலி செலுத்திய உறவுகள்
.
யாழ்ப்பாணம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உயிர்நீத்த நேரம் காலை 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வில், மாவீரர்களின் சகோதரி, முன்னாள் போராளி பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா
தியாகி திலீபனின் 37வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கபட்டது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வு, புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நீதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி திகழ்வில் தியாக தீபம் திலீபனின் திரு உருவ படத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள், பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து உரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது.