Breaking News
ஆங்கிலத்தில் CLUSTER BOMBS என்றழைக்கப்படுகிற இந்த குண்டுகள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது ஈழத்தில் தான்...!!
ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடைபெறுகிற போரில் கூட பயன்படுத்த தடை.

கொத்துக்குண்டுகள்:
ஆங்கிலத்தில் CLUSTER BOMBS என்றழைக்கப்படுகிற இந்த குண்டுகள் கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது ஈழத்தில் தான்...!! ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறுசிறு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும்... ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடைபெறுகிற போரில் கூட பயன்படுத்த தடைசெய்யப்பட்ட இந்த கொத்துக்குண்டுகளைத்தான் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் (NO FIRE ZONE) ஏகத்துக்கும் கொட்டித்தள்ளியது சிங்கள இனவெறி இராணுவம்...
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுவதை கண்டித்து போராடிய இந்தியா தான்...ஈழத்தில் மிகச்சரியாக குண்டு வீச விமானிகளுக்கு பயிற்சியளித்தது. விமானத்திலிருந்து குண்டுகளை மிகச்சரியாக பள்ளிகள் மீதும், மருத்துவமனைகள் மீதும், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் வீச இந்திய ராடார்கள் உதவி செய்தது...!! கொன்று குவிக்கப்பட்ட பிணங்களில் கந்தகத்தின் நெடியோடு இந்தியத்தின் துரோகமும் கலந்திருந்தது