Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

,

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி காவற்துறையினர், யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது, வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதன் போது வாகனத்தினுள் ஆற்று மணல் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட வேளை, மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாக அனுமதி பத்திரம் ஒன்றினை சாரதிகள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
அவற்றினை காவற்துறையினர் சோதனை செய்த போது , அவை போலியான அனுமதி பத்திரம் என்பதனை காவற்துறையினர் கண்டறிந்து, மணல் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இரு சாரதிகளையும் கைது செய்தனர்.
அதேவேளை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தினையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவற்துறையினர்  இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.