Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரங்கக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு.

.

கிராமப்புற மக்களுக்கு கலாசார அனுபவங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதில் அரங்கக் கலைஞர்கள் மேற்கொள்ளும் பணிக்கு ஜனாதிபதி பாராட்டு
அரங்கக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு  நேற்று  (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இழந்த கலாசார வாழ்க்கையை மீண்டும் கொண்டு வர திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களின் பணியை பாராட்டிய ஜனாதிபதி அதற்காக தனது நன்றியையும் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் வாழும் மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மேலதிகமாக, அவர்களின் கடினமான வாழ்க்கை முறையைத் தணிக்க ஒரு கலாச்சார வாழ்க்கையை வழங்குவதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கலாச்சார செயற்பாடுகள் மூலம் நாட்டில் ஒழுக்கநெறியான குடிமகனைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரங்கக் கலைத் துறையில் உள்ள கலைஞர்களுக்கு வலுவான தொழில்முறை மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் ஒரு கலாசார பாலத்தை கலைஞர்களால் கட்டியெழுப்ப முடியும் என்று கூறிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் ஒரு கலாசார மறுமலர்ச்சியை உருவாக்க உண்மையான நோக்கமுள்ளது என்றும், அந்த நோக்கத்திற்காக அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.