Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சம்பந்தனின் இறுதிக்கிரியை தினத்தன்று கிழக்கில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு துக்கதினமாக பிரகடனப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்

.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சட்டத்தரணி இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது இறுதிக்கிரியை நடைபெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் அறிக்கை யொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உச்சபட்ச அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக தனது வாழ்நாள் பூராவும் அயராது பாடுபட்ட அரசியல் ஆளுமையான சம்பந்தனுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்த இலங்கையர்களான நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அன்னாரின் பிரிவுத் துயரால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திருகோணமலை மக்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது மக்கள் பணியயையும், அரசியல் சேவைகளையும் கௌரவிக்கும் விதமாக நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அவரது இறுதிக்கிரியை இடம்பெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.