Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாடசாலைகளுக்குள் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக கல்வி அமைச்சினால் சுற்றுநிரூபம் வெளியீடு.

தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது.

பாடசாலைகளுக்குள் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக கல்வி அமைச்சினால் சுற்றுநிரூபம் வெளியீடு.

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க தடை விதிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு இது தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றை விடுத்துள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் சுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை மேற்கோள்காட்டி சுற்றறிக்கை
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள்காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதன்படி, கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும், எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, ​​சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.