Breaking News
சுமந்திரன், சாணக்கியன் – இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு
.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர்.
சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) குறித்த சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.