Breaking News
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிக வசதிகளுடன்அதி தீவிர சிசு பராமரிப்பு (NICU )பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அதி தீவிர சிசு பராமரிப்பு (NICU )பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் வி.வேதநாயகன் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வடமாகாண சுகாதார செயலாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யோகேஸ்வரன் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இலங்கையில் அதிக வசதிகளுடன் கூடிய சிசு சிகிச்சை பிரிவு என அறியப்படுகிறது.இச்சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் வழங்கக் கூடிய 6 இயந்திரங்களுடன் கூடிய விடுதி, குழந்தையுடன் தாய் தங்கி நின்று சிகிச்சை பெறுவதற்கான 6 கட்டில்களுடன் கூடிய விடுதி, சிசுக்களுக்கு பாலூட்டுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்கும் விடுதி, 10 கட்டில்களுடன் கூடிய தாய் சேய் பிரிவு, பாலூட்டும் அறை, பிறந்து 42 நாட்களுக்கு உட்பட்ட சிசுக்களுக்கான கிளினிக் அறை என பல வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டது.அத்துடன் குழந்தைகளுக்கான 98 வீதமான சிகிச்சை வழங்க முடிவதுடன்,அறுவை சிகிச்சை தவிர குறைமாத குழந்தை பராமரிப்பு போன்ற பலவற்றிற்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பாமல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலேயே சிகிச்சை வழங்க முடியும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.