“இனத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடும் ஒரே வேட்பாளர் தான் மட்டுமே“
.
ஏனைய வேட்பாளர்களைப் போன்று தனிஒருவரை முன்னிலைப்படுத்தாது இனத்தை முன்னிலைப்படுத்தி தான் மட்டுமே மக்களிடம் வாக்கு கோருவதாக தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மன்னார் நகர பேருந்து நிலையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ இதுவரை எமக்கு விடிவு கிடைக்கவில்லை. விடுதலைக்காக போராடி பலர் மாண்டிருக்கிறார்கள். தேர்தலுக்ககு முன்னதாக அரிய நேத்திரன் விலகிவிட்டார். இவரை ஆதரிக்கார் அவரை ஆதரிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வரலாம் எதையும் நம்பாதீர்கள். சங்கு சின்னத்தே வாக்களிக்களியுங்கள்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் பொதுக்கூட்டம் இடம் பெற்றது.
இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.
குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்,ஆ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். சுமார் ஆயிரம் பேர் வரை இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.