Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா

.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில்  விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா வான அறுவடை விழா இன்று(9)  வியாழன் காலை  11:30 மணி அளவில் நடைபெற்றது.

இலுப்பை  கடவை கமக்கார அமைப்பின் தலைவர் வி எஸ் சிவகரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர். க.கனகேஸ்வரன் கலந்துகொண்டு தமிழர்  பாரம்பரிய பண்பாட்டு முறைப்படி முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்இ மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார்இமாவட்ட விவசாய பணிப்பாளர்  அ.சகிலா பானுஇமற்றும் அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் இவிவசாய அமைப்பின்  உறுப்பினர்கள்இ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் பொங்கல் வைத்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடந்த காலத்தில் ஏற்பட்ட  மழை வெள்ளத்தின் நிமித்தம் விவசாயிகள் முற்றாக பாதிக்கப்பட்ட  போதிலும்  இப்பகுதியில் நெல்  விளைச்சல் வெற்றியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.