Breaking News
அநுர குமார திஸாநாயக்கவால் அரசாங்கத்தை திறம்பட நடாத்த முடியாது! - கே.டி. லால்காந்த.
.
அநுரவால் அரசாங்கத்தை திறம்பட நடாத்த முடியாதென லாலுக்குத் தெரியும்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவால் அரசாங்கத்தை திறம்பட நடாத்த முடியாததென்பது தெரியுமென்பதால் தனது கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அநுர தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கே.டி. லால்காந்த முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டொன்றிலேயே இக்கருத்தை வெளிப்படுத்திய மரிக்கார், ஈரான் ஜனாதிபதி எப்ராஹிம் றைசியின் திடீர் மரணத்துக்கான அனுதாபச் செய்தியை தனது அலைபேசியிலிருந்து அநுர பிரதி செய்ததாகக் கூறியதுடன், அவ்வாறானவர் எவ்வாறு நாட்டை ஆளலாம் எனக் கேள்விக்குட்படுத்தினார்.