Breaking News
தேசிய மட்ட பூப்பந்தாட்டம் யாழ் மாவட்ட வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்!
.
தேசிய மட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
அகில இலங்கை தேசிய மட்ட Ranging Level- 1 பூப்பந்தாட்டப் போட்டி கடந்த 23ம் திகதி தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது.
இதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ச. காண்டீபன், கு. சற்குணசீலன் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும்,45வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த நா. குகதாஸ் மற்றும் வி. தயாபரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கொண்டனர்.