Breaking News
மங்கிப் போன இந்தக் கறுப்பு- வெள்ளைப் படம் பற்றிய சில தகவல்களைப் பகிரவேண்டும்.
.

தலைவர் பிரபாகரன் 1991 ஓகஸ்ட் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மிக அரிதான ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்ட படம். இதில் மூத்த பலருடன் தோன்றும் எனக்கு அப்போது வயது 22. பத்திரிகைப்பணி மீதான ஒருவித லட்சிய வெறியுடன் உதயனில் இணைந்துகொண்ட ஆரம்ப காலம் அது.
இந்தியப் படைகள் முற்றாக வெளியேறிய பிறகு தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடிய இரண்டாவது சந்தர்ப்பம் இது. அச்சமயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த நிகழ்வு அது.
நாளாந்த வாழ்வு போராக மாறியிருந்த அன்றைய யாழ் குடாநாட்டின் நிலைவரத்தையும் அவ்வேளை இது போன்ற சந்திப்புகள், சம்பவங்கள் பத்திரிகைகளில் மாத்திரம் செய்திகளாக வெளியாகும் சமயங்களில் அவை ஏற்படுத்திய உணர்வலைகளையும் அக்காலப் பகுதியை முழுமையாக வாழ்ந்து அனுபவித்தவர்களால் மாத்திரமே இப்போது நினைவுகூரமுடியும்.
முழு அளவிலான பொருளாதாரத் தடை.
கப்பல்களில் வரும் அரிசி,மாவு மண்ணெண்ணெய்யை விட எந்தப் பொருள்களும் கிடைக்காது. படங்களைக் கழுவுகின்ற, அவற்றை புளொக் செய்கின்ற வசதிகள் அன்றைய யாழ்ப்பாணத்தில் மிக மிக அரிது.
இந்தப் படம் எங்கள் கையில் கிடைப்பதற்கு வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தது.
இணை ஆசிரியர் வித்யாதரன் (தாடியுடன்), சில காலம் ஈழநாடு ஆசிரியராகப் பணியாற்றிய யோகநாதன், ஈழநாடு பத்திரிகையின் படப்பிடிப்பாளர் தேவா, இறுதிப்போர் நடந்த இடங்கள் எங்கும் "புலிகளின் குரல் வானொலியை இயக்கிச் சென்று பின்னர் காணாமற்போன தவபாலன், ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் உள்ளனர்.
(சம்பவத்தின் முக்கியத்துவம் கருதி அவர்களது பெயர்களை இங்கே அனுமதி பெறாமலே பதிவிட்டுள்ளேன்)
உள்ளூர்ப் பத்திரிகையாளர்களது இந்தச் சந்திப்பு நடந்த அதே நாளில்
பிபிசி படப்பிடிப்புக் குழுவினர், இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்றவர்களும் புலிகளது தளத்தில் தங்கியிருந்து நீண்ட நேர்காணல்களைத் தயாரித்துக்கொண்டிருந்தனர்.
தலைவர் பிரபாகரனோடு புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையா, மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், யோகரத்தினம் யோகி உட்பட பல தளபதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
1991 இல் புலிகள் பெருமெடுப்பிலான ஆயத்தங்களுடன் ஆனையிறவுப் பெருந் தளம் மீது நடத்திய நீண்ட பெரும் மரபுவழிச் சமர் முடிவடைந்து சில வாரங்களில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதனால் அந்தச் சமரின் அனுபவங்கள் விளைவுகள் பற்றிய பல தகவல்களைத் தலைவர் பிரபாகரன் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஆனையிறவைப் பாதுகாப்பதைத் தமது கௌரவப் பிரச்சினையாகக் கருதிய சிறிலங்கா அரச படைகள் சுமார் 45 தினங்கள் நீடித்த புலிகளின் அந்தச் சமரைப் மிகப் பெரிய படையெடுப்பையே நிகழ்த்திப் பகீரதப் பிரயத்தனம் எடுத்து எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு முறியடித்தன என்பதை விளக்கிய அவர், அந்தச் சமரில் 564 போராளிகள் வீரச்சாவடைந்ததை ஒப்புக் கொண்டிருந்தார்.
பிரேமதாசா அரசுடன் சுமார் ஓராண்டு காலம் நடந்துவந்த போரில் புலிகள் இயக்கம் ஈட்டிய வெற்றிகள், அச்சமயம்
தென்னிலங்கையில் பிரேமதாசா ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்திருந்த
அரசியல் நிலைவரம் போரில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்பன தொடர்பான கேள்விகளுக்கும் தலைவர் பிரபாகரன் பதிலளித்திருந்தார். மறுநாள் செப்ரெம்பர் முதலாம் திகதி வெளியாகிய நான்கு பக்க உதயனில் "எமது இழப்புகளே எமக்கு உந்துசக்தி" என்று தலைப்பிட்டுப் பிரபாவின் செவ்வியை நாங்கள் வெளியிட்டது நினைவிருக்கிறது.
(-கா.குமாரதாஸன்
பத்திரிகையாளர்.)
பிரதி பதிப்பு ...