ஒரு மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்குகளின் வீதம்!
.
.jpg)
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இதன்படி இன்று நண்பகல் ஒரு மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
கொழும்பு - 54%
கண்டி - 30 %
நுவரெலியா - 50 %
பதுளை - 48%
திகாமடுல்ல - 37 %
மட்டக்களப்பு - 32 %
கேகாலை - 32 %
புத்தளம் - 30 %
மாத்தறை - 34 %
களுத்துறை - 20 %
திருகோணமலை - 45 %
குருநாகல் - 28 %
பொலன்னறுவை - 42 %
யாழ்ப்பாணம் - 36 %
இரத்தினபுரி – 40 %
மொனராகலை - 44%
அநுராதபுரம் – 40 %
காலி - 24 %
மாத்தளை - 40%
வன்னி – 46%
யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு, இதுவரையில் 40% சத வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது. நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.