Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உண்மைக்கு புறம்பான பொய்யான, ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதற்காக விந்தன் கனகரத்தினத்தின் மீது வழக்கு!

விந்தன் கனகரத்தினம் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.

தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான பொய்யான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக தன் மீது பரப்பியதற்காக விந்தன் கனகரத்தினத்தின் மீது சுரேந்திரனால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நான்காவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்ற அழைப்பாணைக்கு தலைமறைவாகி இருக்கும் விந்தன் கரகரத்தினம் பல  முறைகள் அழைப்பாணை அனுப்பியும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஒளித்து திரிகிறார் என தெரிகிறது. 

இதன்படி நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.

மேலும் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்தபடி அவதூறுகளை பரப்பிய பொழுது,  ஊடகவியலாளர்கள் "நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன" வென்று கேட்ட பொழுது நான் அதற்கு தயாராகவே உள்ளேன் என்று  விந்தன் கரகரத்தினம் வீராப்பு பேசியது அனைவரும் அறிந்ததே. 

 இருப்பினும் ஆதாரங்கள் இல்லாமல் பொய் குற்றச் சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பியதனாலே இப்பொழுது நீதிமன்றத்தை முகம் கொடுக்க முடியாமல் ஒளித்து திரிவது தெரியவந்துள்ளது.
 இது தொடருமாக இருந்தால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டிற்கு மேலதிகமான சட்டச் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதோடு தண்டனையும் பெற்றுக் கொள்ள வேண்டி வரும். 
 அவதூறுகளையும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் பரப்பு பவர்களுக்கு  இது ஒரு நல்ல பாடமாக அமையும். மேலும் விந்தன் கரகரத்தினத்தினுடைய பேட்டியை ஒளிபரப்பிய,  அதேபோன்று மீண்டும் அவரிடம் பேட்டியை பெற்று பரப்பிய ஊடகங்கள் மீதும் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று தெரிய வருகிறது. 
 அதற்கான ஏற்பாடுகளும், சிறப்பு சட்டத்தரணிகள் ஊடாக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது.