Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஆபிரகாம் லிங்கன் என்பது ஒரு மலை. சாகேத் என்பது ஒரு சிற்றுளி !

சிற்றுளி ஒருவேளை மலையை செதுக்கி அதன் பெயரை எழுதி இருக்குமோ?

யு.எஸ்.எஸ்.ஆபிரகாம் லிங்கன். நீளம்  333 மீட்டர். நிமிட்ஸ் ரக விமானந்தாங்கிக் கப்பல். அணுசக்தியில் இயங்கக்கூடியது. ஐந்தாயிரம் கடற்படையினர், ஊழியர்கள் தங்கியிருக்கும் கப்பல் இது. ஆபிரகாம் லிங்கனை எதிரிநாட்டு ஏவுகணையோ, டிரோனா தாக்குவது அவ்வளவு எளிதல்ல. காரணம் ஆபிரகாம் லிங்கனைச் சுற்றி இருக்கும்பல அடுக்கு பாதுகாப்பு. 
எப்போதும் ஒரு தொகுதி நாசக்காரி (Destroyer) கப்பல்கள் புடைசூழத்தான் ஆபிரகாம் லிங்கன் வீற்றிருக்கும். கூடவே எஃப்-35, ஹார்னெட் ரக போர்விமானங்கள் வேறு. நூறு கிலோ மீட்டர் தொலைவிலே ஏவுகணை அல்லது ட்ரோன் லிங்கனை நோக்கி பறந்துவந்தால், எஃப்-35 போர்விமானங்கள் பறந்து சென்று ஏவுகணை/ட்ரோனை வழிமறித்துத் தாக்கி அழிக்கும்.

அதற்கு தப்பி அதையும் தாண்டி ஏவுகணை பறந்து வந்தால், ஆபிரகாம் லிங்கனின் ஸ்டாண்டர்ட், சீ ஸ்பாரோ (கடல்குருவி) ஏவுகணைகள் பாய்ந்து எதிர்சேவை செய்து எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும். அதையும் தாண்டி ஏவுகணை, ஆபிரகாம் லிங்கனை முத்தமிடத் துடித்தால், ரேடார் மூலம் வழிநடத்தப்படும் பீரங்கிகள் அந்த ஏவுகணையைச் சுட்டுவீழ்த்தும். இந்த பீரங்கிகள் ஒரு நிமிடத்துக்கு பலஆயிரம் சுற்று குண்டுமழை  பொழியக்கூடியவை. இவை போக, ஆபிரகாம் லிங்கனில் உள்ள மின்னணு கருவிகள், எதிரி ஏவுகணைகளின் ஜி.பி.எஸ்.அமைப்பைக் குழப்பி அவற்றைத் திசைதிருப்பி விடக்கூடியவை. அல்லது கடலில் விழவைக்கக்கூடியவை. 

இத்தனை தடைகளையும் தாண்டினால்தான் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான ஆபிரகாம் லிங்கனை எதிரியின் ஏவுகணை அல்லது ட்ரோன் தொடமுடியும். ஆனால், பெரிய மலையைக் கூட சிறிய உளி உடைத்துவிடும் இல்லையா? அந்த வகையில் ஈரான் வசம் உள்ள சாகேத் ஏவுகணை கூட ஓர் உளிதான். வெறும் 50 கிலோ வெடிப்பொருளுடன் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஏவுகணை அது. நீளம் வெறும் மூன்றரை மீட்டர் தான். சாகேத்துக்கு வேகத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை. ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வதில்தான் அதற்கு அதிக நம்பிக்கை. தாழ்வாகப் பறந்து ரேடாரில் சிக்காமல் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவுகூட பறக்கும் ஏவுகணை இது.

வெறும் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ஏவுகணைதான் சாகேத். ஆகவே இழப்பை பற்றி துளிகூட கவலைப்படாமல் எதிரியின் ஏவுகணைத்தடுப்புக்கு இடைவிடாமல் வேலை கொடுத்து ஒரு கட்டத்தில் ‘அட போங்கப்பா’ என்று எதிரியின் ஏவுகணைத் தடுப்பை சலிப்படைய வைத்துவிடுவதில் சாகேத் சமர்த்து. எதிரியின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள இடைமறிப்பு ஏவுகணை தன்மீது மோதி தடுத்து வீழ்த்தினால்கூட சாகேத்துக்கு வெற்றிதான். காரணம் எதிரியின் பணம் நடுவானில் கரியாகிறது  என்று அதற்கு அர்த்தம். இதுபோன்ற சாகேத் ஏவுகணைகளை ஏவித்தான் ஆபிரகாம் லிங்கனை ஈரான் தாக்கியிருப்பதாக செய்திகள் வருகிறது. வேறு ரக ஏவுகணை என்றும் செய்தி பரவுகிறது.

ஆபிரகாம் லிங்கனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.  ஆனால், ஈரானுக்கு அருகே 340 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த லிங்கன், இப்போது ஆயிரம் கிலோ மீட்டர் அப்பால் நகர்த்திருப்பதும், ஈரானுடன் போர் செய்ய 3ஆவதாக ஒரு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் வந்து கொண்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விமானந்தாங்கி கப்பல்கள் எல்லாம் தகர்க்க முடியாத மாமலைகள் அல்ல. தொட முடியாதவையும் அல்ல. அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று டீசலில்(!) இயங்கும் நீர்மூழ்கி கப்பலிடம் அடிவாங்கிய நிகழ்வு எல்லாம் உண்டு. 

டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் அதன் பேட்டரிகளில் மின்சக்தியை சேகரித்துக் கொண்டு மின்னாற்றல் மூலம் சத்தமின்றி நெருங்கினால், விமானந்தாங்கி கப்பலால் அதைக் கண்டுகொள்ள முடியாது. அணுசக்தியில் இயங்கும் பெரிய கப்பலைப்போல மின்னாற்றாலால் இயங்கும் கப்பல் அதிக வெப்பத்தை வெளியிடாது. எதிரியின் கண்காணிப்புக் கருவிகளில் எளிதாக சிக்காது. ஆபிரகாம் லிங்கன் என்பது ஒரு மலை. சாகேத் என்பது ஒரு சிற்றுளி. சிற்றுளி ஒருவேளை மலையை செதுக்கி அதன் பெயரை எழுதி இருக்குமோ?

முகநூல் பதிவு: மோகன ரூபன்.