Breaking News
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்; 71 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்
.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதில் வெற்றியீட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தரவுகளின் அடிப்படையில் 81 சட்டமன்ற உறுப்பினர்களில் 71 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
இது 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய சட்டமன்ற உறுப்பினர்களை விடவும் 20 சதவீதம் அதிகமாகும்.