மீண்டும் மக்களை கொன்று குவித்து காட்டும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஜே.வி.பி.
1988/89 காலப்பகுதியில் ஜே.வி.பி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது?
மீண்டும் மக்களை கொன்று குவித்து காட்டும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஜே.வி.பி.
அந்தக் காலத்தில் ஜே.வி.பி கிராமத்துக்குச் சட்டத்தைக் கொண்டு வந்து அப்பாவி மக்களின் கை, கால்களை வெட்டி கொலை செய்தது. அந்த குழுக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால், அந்த பயங்கரமான சகாப்தம் மீண்டும் பிறக்கும் என கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுக்களை நடத்துகிறார். ஆனால் அனுரகுமார என்ன செய்கிறார் என்பதை வெளிநாட்டுக்கு சென்று கண்டுபிடியுங்கள். வெளிநாட்டுக்கு சென்று கட்சிக்கு கொடுக்கும் பணத்தை தனதுபாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்.
எனவே இந்தக் கதையை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆட்சியைப் பெறுவதற்காக கொலை செய்தவர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகும் அதே திட்டத்தைச் செய்ய முயற்சிக்கின்றனர்.
இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் இல்லாமல் இப்படியே இருப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்” என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.