உயிரிழந்த படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை
இங்கை இராணுவம் கூலிப்படையாக பணி -யுத்த வலையத்திற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் காய விபரங்கள் குறித்து தெரியாதுள்ளது.
5.jpeg)
ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையர்: ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை
ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கையில் ஆயுதப் படைகளுடன் இணைப்பதான போலி வாக்குறுதிகளால் இலங்கைப் படையினர் ஏமாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலவுரிமை, குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்ய குடியுரிமை மற்றூம் ஒரு மில்லியனுக்கும் அதிகளவான மாதச்சம்பளம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து ஏமாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதுடன், உயிரிழந்த படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைப் படையினர் பலர் ஏற்கனவே யுத்த வலையத்திற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் காய விபரங்கள் குறித்து தெரியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பூர்வமாக இவர்அள் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை எனவும், மாறாக கூலிப்படையினராக பணிபுரிய வற்புறுத்தப்பட்டனர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நிலையில், மனித கடத்தல்காரர்களுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கையில் இலங்கை படையினர் கூலிப்படையாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்ட மனித கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), பொலிஸ் திணைக்களம், மற்றும் புலனாய்வு சேவைகள் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.