Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்

.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து  மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை  சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது 

தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்கள், பெற்றோர்கள்,  உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை இன்று(08) முன்னெடுத்தனர் 

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி  இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் அந்த அபகரிக்கப்பட்ட துயிலுமில்ல காணிக்கு முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.

நாட்டினுடைய புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கியதை போன்று, தங்களுடைய பிள்ளைகளின் கல்லறைகள் இருக்கின்ற குறித்த காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து தருமாறு கோரி குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்தவர்கள்,

குறித்த காணியில் இராணுவத்தினர் இருந்துகொண்டு கல்லு அறுத்து  விற்கின்ற செயற்பாடுகளையே செய்கின்றார்கள்.ம் இது ஒரு இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணி அல்ல.

ஆகவே இந்த காணியை விடுவித்து தமது உறவுகளை சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு ஏற்ற வகையிலே விடுவித்து தருமாறும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடக ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும்  உறவுகள் தெரிவித்தனர்.