Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சனல் 4 ஆவணப்படத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு….

.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் சாதகமான விதத்தில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் சில சாதகதன்மைகளை அவதானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர்பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச விக்கிரமசிங்க அரசாங்கங்கள் அலட்சியம் செய்த சில விடயங்கள் குறித்து சிஐடியினர் தற்போது கவனம் செலுத்துகின்றனர் என தெரிவித்துள்ள அவர் உதாரணத்திற்கு சனல் 4 ஆவணப்படத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தனிநபர்களை தற்போது விசாரணைக்கு அழைக்கின்றனர் அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதனையே நாங்கள் எதிர்பார்த்தோம்,இதேயளவு அர்ப்பணிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதை நாங்கள் விரும்பவில்லை,குண்டுதாக்குதலை திட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எதிராகவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கத்தோலிக்க ஆயர்பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்க குழுக்களை அமைத்து அறிக்கைகளை கோரினார் என தெரிவித்துள்ள அவர் அறிக்கைகளை மாத்திரம் கோருவதில் அர்த்தமில்லை,கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,இன்று நாங்கள் முன்னேற்றகரமான விடயங்களை காண்கின்றோம்,விசாரணைகளை இரகசியமாக முன்னெடுத்த பின்னர் எங்களிற்கு அறிவிப்பதை விட அரசாங்கம் அனைத்தையும் வெளிப்படையான விதத்தில் செய்யவேண்டும்,விசாரணை முடிவுகள் குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.