Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இல்லாதொழிக்கப்படும்!

எதிர்காலத்தில்???

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இல்லாதொழிக்கப்படும், இது "வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை" என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதை மேற்பார்வை செய்வதற்காக அமைச்சரவையினால் ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், அரசாங்கம் எந்தவொரு நெருக்கடியையும் இனவாத மனப்பான்மையுடன் அணுகாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.