Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: பிரபல சிங்கள ஊடகம் தகவல்.

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: பிரபல சிங்கள ஊடகம் தகவல்

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், தென் மாகாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்ட விகாராதிபதிகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஏற்கனவே மதுபான கடைகளுக்கான உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் இருநூறு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் தெரியபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.