Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழ் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரியுள்ளார்.

.

யாழ் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் கடற்படையினரிடம் கோரியுள்ளார்.

ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது

இதன்போது, நெடுந்தீவிலிருந்து நோயாளர்களை கொண்டுவரும் சேவை ஹியூமெடிக்கா நிறுவனத்தின் அம்புலன்ஸ் படகுச்சேவை மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாதாந்தம் 15 இலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு அம்புலன்ஸ் படகுச்சேவை மூலம் கொண்டுவரப்படுகின்றார்கள்.இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதேவேளை கடற்படையினராலும் தற்போது அம்புலன்ஸ் படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றமைiயும் குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

அதேவேளை கடந்த நவம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக படகு சேவைகள் இடம்பெறாத நிலையில் , நெடுந்தீவில் இருந்து மூன்று நோயாளர்கள் விமானப்படையினரின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.