Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடமாகாண நீர்வளத்தின் எதிர்காலம் - கூட்டாகச் சிந்தித்து செயற்படுவதே அவசியமானது!

திட்டமிட்டு சரியான அரச அலகுகளின் உதவியைப் பெற்றுச் செய்யும் திட்டமிடல் முயற்சியில் நாங்கள் பின்தங்கியவர்களாகத் தான் இருக்கிறோம்.

எங்களிடம் இருக்கின்ற ஊர் சார்ந்த, நிலம் சார்ந்த அறிவை அதற்குரிய மதிப்பைக் கொடுத்து நாங்கள் கௌரவமாக நடந்து கொள்வோமானால் எல்லாத் தீர்வுகளும் எம்முடைய கையில் தான் இருக்கின்றன. எங்களுடைய பலம் கூட்டுப் பலமாக இருந்தால், துறைசார்ந்த அறிவும், மக்களினுடைய அறிவும் ஒன்றாகத் திரளும் போது அதனுடைய வலு மிகவும் முக்கியமானது என்பதனை நான் எந்த இடத்திலும் அடித்துக் கூறத் தயாராக இருக்கிறேன். 

நீரைப் பற்றிய தெளிவான ஆய்வின் அடிப்படையில், அறிவைத் திரட்டியதன் அடிப்படையில் இன்னவற்றை செய்யலாம், இன்னவற்றை செய்யக்கூடாது எனத் தெளிவாக மக்களுக்கு சொல்லக் கூடிய ஒரு துணிவை எங்கள் அணியினருக்கு தந்திருக்கிறது. 
தீவுப்பகுதியின் நீர் வளத்தை அந்தப் பகுதி மக்கள் தான் நன்கறிந்தவர்கள், தீவுப் பகுதியின் நீர் நெருக்கடியை உணர்ந்து, வாழ்ந்து, தலைமுறை தலைமுறையாக கையாண்டவர்கள் அதே பிரதேசத்து மக்கள். ஆகவே நீர்வளம் சார்ந்து எடுக்கின்ற முடிவுகளை, நேரத்தோடு ஆயத்தமாகி கூட்டாகத் திட்டமிட்டு சரியான அரச அலகுகளின் உதவியைப் பெற்றுச் செய்யும் திட்டமிடல் முயற்சியில் நாங்கள் பின்தங்கியவர்களாகத் தான் இருக்கிறோம்.

மழை வருவதற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் கிடைத்த நிதியைக் கொண்டு செய்ய வேண்டும் என ஓடித் திரிந்து தவறாக செய்வதனை விட அடுத்த ஆண்டு வரை காத்திருந்து இன்னும் திறமையாகச் செய்வது அந்தக் குளத்தை இன்னும் சரியாக நிலைப்படுத்தும். 
வடமாகாண நீர்வளம் சந்தித்து வருகின்ற சவால்கள், நீர்வள மேம்பாடு, நீர்வள பாதுகாப்பு அதன் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் நீரியல் ஆய்வாளரும், சுவீடன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியருமான ந. சிறீஸ்கந்தராஜா.