பலதும் பத்தும் :- 11,04,2025 -கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார்,
வெற்றி நமதே ஊர் நமதே.

அமெரிக்கா வரி
டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரிவிதிப்பில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதிகரித்துள்ள நிலையில்இ அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125மூ ஆக சீனா உயர்த்தியுள்ளது..இந்த வரி அமுலாக்கம் நாளை முதல் நடைமுறைக்குவரவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது 145மூ வீதம் வரையான வரியை அறவிடவுள்ளதாகசீனா அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்இ 'இந்த வரிப் போரில் வெற்றியாளர்கள் இல்லை' என்று கூறிஇ அமெரிக்கவின் இந்த 'கொடுமைப்படுத்துதலை' எதிர்க்கும் போரில் பெய்ஜிங்கில் சேருமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்தார்.
கட்டானை முன்பிள்ளைப் பருவக் குழந்தைகள்,
கட்டானையில் முன்பிள்ளைப் பருவக் குழந்தைகளுக்கான கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்,'ரகிமு பரிசரய - தபமு பிரிசுதுவ (சூழலைப் பாதுகாப்போம் - சுத்தமாக வைத்திருப்போம்)' எனும் தொனிப்பொருளின் கீழ் கிளீன் ஸ்ரீலங்காவேலைத்திட்டத்தை முன்னிட்டு கட்டான பிரதேச செயலாளர் சுமுது அத்துகோரளவின் வழிகாட்டலின் கீழ் கட்டான திமிரிகஸ்ர்ரகட்டுவஹைடெக் முன்பள்ளியில் முன்பிள்ளைப் பருவக் குழந்தைகளுக்கு கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பாகத்தெளிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. வளமானவற்றை மிகவும் நிரந்தரமானதாகஇ வசதியானதாக பழக்கப்படுத்திக் கொள்ளக்கூடிய முன் பிள்ளைப் பருவக் குழந்தைகள் கழிவுப்பொருட்களை முறையாக அகற்றுதல் மற்றும் சூழலை நேசிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்தும் நோக்கில் இத்திட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டது.
சேர்பெறுமதி வரி திருத்தம்
சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டுசான்றுரைப்படுத்தினார்.சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில்இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூன்றாவதுமதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய,, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 4 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார்,
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண்ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (10) இரவு மீட்டுள்ளதாகவாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையின் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இது பற்றி தெரியவருவதாவது, குறித்த நபர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குதாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜராகுமாறு அவரை பிணையில் விடுவித்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றில் தண்டப்பணம் செலத்துவதற்கு பணத் தேவை ஏற்பட்டதையடுத்து மகளிடம் 30 ஆயிரம் ரூபாபணத்தை கோரியுள்ள நிலையில் அவரிடம் அந்தளவுக்கு பணம் இல்லாததை தெரிவித்துள்ளார் இதனை தொடர்ந்துபுதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர் எனபொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்குஅறிவித்த நிலையில் குறித்த சடலத்தை சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெற்றி நமதே ஊர் நமதே.
உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் பிரதமர்இ இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துமக்கள் சந்திப்பில் கலந்து கொள்கின்றார். இதனை அடுத்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . காரைநகரில் மதியம் 1 மணிக்கு இ வேலனைப் பகுதியில் மாலை 3 மணிஇ நீர்வேலி பகுதியில் மாலை 4:30 மணி, பருத்தித்துறைபகுதியில் மாலை 6:30 மணிக்கு பிரதமரின் மக்கள் சந்திப்பு இடம் பெற உள்ளது .