Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இன்றிலிருந்து ஆரம்பம்.

தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி  ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம்  கொடிகாமம் கச்சாய் கிராம த்தில்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்றைய தினம் சாவகச்சேரி கச்சாய் கிராமத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 150 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியின் ஏனைய கிராமங்களிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும்  தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.