Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் இலங்கையர் காயம்!

ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200 இற்கும் மேற்​பட்​டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று (16.06.25) காலை Bnei Brak பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின. இது​வரை 140 இற்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13 ஆம் திகதி தாக்குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், இராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3 ஆவது நாளாக போர் நீடித்​தது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது. இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. எனினும், சில ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன. இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100 இற்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் ஏவு​கணை​கள் விழுந்​தன.

ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200 இற்கும் மேற்​பட்​டோர் காயமடைந்துள்ளனர்.