Breaking News
அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார்.
சுவீடன் சென்ற அநுரவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு!
சுவீடன் சென்ற அநுரவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார்.இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.