Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், யாராக இருந்தாலும் திருட்டு, இலஞ்சம், ஊழல் என்பவற்றுக்கு இடமில்லை - சஜித் பிரேமதாச

அம்பாந்தோட்டையில் பாடசாலை நிகழ்வொன்றில் அவர் கருத்து.

மீண்டும் சஜித்துக்கு சவால் விடுக்கும் அனுர: அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசம் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுள் ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் யாராக இருந்தாலும் திருட்டு, இலஞ்சம், ஊழல் என்பவற்றுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர்களுக்கு அதிசொகுசு வாழ்க்கையை வாழ்வதை விட கடினமான வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தன்னுடைய சுய மரியாதை, மானம் பற்றி சிந்திக்காமல் அற்ப அரசியலில் ஈடுபடுவதாக வலியுறுத்திய அவர் ,அற்ப அரசியலால் இந்த நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு அனைவரும் கைகோர்த்து தம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளை பின்பற்றாமல் மக்கள் சுயமரியாதையுடனும் , தன்னம்பிக்கையுடனும் பெருமிதத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென எதர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற அமைச்சர் ஒருவர் கூட ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என உறுதியளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சவால் விடுத்துள்ளார்.

சலுகைகளைப் பகிர்ந்து கொள்வதில் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.