Breaking News
நாம் கூறும் வேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பர்; நம்பிக்கை வெளியிட்டுள்ள சுமந்திரன்
.
தமிழரசு கட்சி வாக்களிக்குமாறு கூறும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் இறுதிக் கட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குமாறு கோரும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே, பொது மக்கள் வாக்களிப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.