Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“பொறுத்தது போதும்” - தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று (06) மற்றும் நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜெகத் சந்திரலால், கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

“பொறுத்தது போதும்” என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் தமது பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.