Breaking News
மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி: பொதுஜன பெரமுன அச்சம்
.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி சதித்திட்டம் தீட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தமது அரசாங்கத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளின் குடியிருப்புகளையும் பாதுகாப்பையும் பறித்து இவ்வாறு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், இதுகுறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.