Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜனாதிபதி முய்சுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது.. மாலைத்தீவில் பரபரப்பு

.

 

இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலைத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்பட்டார். மாலைத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைதீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முகமது முய்சு மாலைதீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.