Breaking News
தமிழ் தரப்பினரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!
.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நேற்றிரவு தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பில் இலங்கைத் தமிழசுக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.சிறீதரன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.